Theme Check

வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.. வங்கிகளில் வட்டி விகிதம் உயர்வு..!

வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.. வங்கிகளில் வட்டி விகிதம் உயர்வு..!

வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.. வங்கிகளில் வட்டி விகிதம் உயர்வு..!
X

நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, கடன்களுக்கான வட்டி விகிதத்தை கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ரிசர்வ் வங்கி அதிகரித்தது.

அதன்படி,36 நாட்களில் வட்டியை 0.90% விகிதங்களை உயர்த்தியது. இதனால், வாகனங்கள், வீடு, தனிநபர் கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டன.

இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சற்று மகிழ்ச்சி தரும் வகையில், வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி: சாதாரண குடிமக்களின் வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.50% வரையும், மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதத்தை 3.40% முதல் 6.30% வரை உயர்த்தியுள்ளது.

ஹெச்.டி.எப்.சி வங்கி: சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 2.75% முதல் 5.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 3.25% முதல் 6.50% வரை உயர்த்தியுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி: சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 2.50% முதல் 5.90% வரையிலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 3% முதல் 6.56% வரை உயர்த்தியுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி: சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 3% முதல் 5.5% வரையிலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 3.50% முதல் 6% வரை உயர்த்தியுள்ளது.

கனரா வங்கி: சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 2.90% முதல் 5.75% வரையிலும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 2.90% முதல் 6.25% வரை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story
Share it