Theme Check

பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இந்த கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி..!

பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இந்த கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி..!

பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இந்த கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி..!
X

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது.

இந்த கோவிலுக்குச் செல்ல, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று (13-ம் தேதி) முதல் வரும் 16-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it