Theme Check

பக்தர்களுக்கு நற்செய்தி.. சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. சதுரகிரி செல்ல 4 நாட்கள் அனுமதி..!
X

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது.

இங்கு, மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை (26-ம் தேதி) பிரதோஷமும், வரும் 28-ம் தேதி ஆனி மாத அமாவாசையும் வருகிறது. இதையொட்டி, நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில், “பக்தர்கள், காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். இரவில் பக்தர்கள் கோவிலில் தங்கக்கூடாது.

10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் கோவிலுக்கு வருவதற்கு அனுமதி இல்லை. ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. மழை பெய்தால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை” என தெரிவித்துள்ளனர்.

Next Story
Share it