தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி...!! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி...!! அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

எத்தனை முறை கூறினாலும் அலுத்துப் போகாத ஒரு வார்த்தை தங்கம்! தங்கம்! தங்கம்! எவ்வளவு தங்கத்தை வாங்கி சேர்த்துக் கொண்டாலும் மனதில் இருக்கும் ஆசை குறையவே குறையாது. எவ்வளவுதான் வாங்கினாலும் வாங்க வேண்டும் என்ற எண்ணமும் நமக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அலுத்துப் போகாது.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தொடர் உயர்வில் இருப்பது மக்களை அதிர்ச்சியில் வைத்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட தங்கத்தின் மேல் இருக்கும் வரி குறைப்பார்கள் என நினைத்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றமே

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 144 குறைந்தது மக்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,112-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து, ரூ.4,514-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமில்லாமல் ரூ.65,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

