Theme Check

#BREAKING:- அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு..!

#BREAKING:- அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு..!

#BREAKING:- அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு..!
X

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனவரி 2022 முதல் மத்திய ஊழியர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் 3 சதவீதம் அதிகரிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மத்திய ஊழியர்களுக்கு மோடி அரசு பெரும் நிவாரணம் அளிக்கு வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக, 2021 அக்டோபரில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 28 சதவீதம் என்ற அளவில் இருந்து 31 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த உயர்வுக்குப் பிறகு 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, தற்போது 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Next Story
Share it