மாணவர்களுக்கு குட் நியூஸ்! படிப்பை தொடர மத்திய அரசு திட்டம்!
மாணவர்களுக்கு குட் நியூஸ்! படிப்பை தொடர மத்திய அரசு திட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம் நேற்று துவங்கியது. அப்போது, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுக்கான எதிர்கால திட்டம் குறித்து காங்கிரசை சேர்ந்த கவுரவ் கோகாய் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பாஜகவைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் நேற்று கூறியதாவது: “ஆபரேஷன் கங்கா என்ற பெயரில், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்த முயற்சி, 130 கோடி இந்தியர்களின் கூட்டு எண்ணம்.
இந்த மாணவர்களுக்கு, உக்ரைனுக்கு அருகில் உள்ள நாடுகளில் படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுமா என இங்கு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு பத்திரமாக அழைத்து வந்துள்ளோம்.
அவர்களது பாதுகாப்புக்கு மட்டுமல்ல, எதிர்காலத்துக்கும் இந்த அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவர்கள் அனைவரும் டாக்டராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகின்றன. முதலில் இந்த மாணவர்கள் போர் அதிர்ச்சியில் இருந்து விடுபட வேண்டும். மாணவர்கள் நலன் குறித்து அக்கறையுடன் கேள்வி கேட்கும் காங்கிரஸ், மாணவர்களை மீட்டதற்காக அரசுக்கு பாராட்டையும் தெரிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

