Theme Check

செவிலியர்களுக்கு குட் நியூஸ்.. 800 பேருக்கு அரசுப் பணி.. அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி..!

செவிலியர்களுக்கு குட் நியூஸ்.. 800 பேருக்கு அரசுப் பணி.. அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி..!

செவிலியர்களுக்கு குட் நியூஸ்.. 800 பேருக்கு அரசுப் பணி.. அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி..!
X

கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,000 செவிலியர்களில் 1,200 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது.
நீட் தேர்வு: ``மாணவர்கள் விபரீத முடிவு எடுக்கக் கூடாது
800 செவிலியர்களுக்கு மட்டும் தற்போதைய சூழலில் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. விரைவில், அந்த 800 செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

பேரிடர் காலத்தில் பணிபுரிந்த ஒருவரைக்கூட விட்டுவிடாமல் பணி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அனைவருக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் கண்ணீர் மல்க மனு.
நிச்சயம் பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் அரசு தெரிவித்த பிறகும் இந்த போராட்டம் நடந்தது. சில கட்சிகளின் தூண்டுதல் படியே செவிலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பேரிடர் காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வருங்காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
Next Story
Share it