Theme Check

பெற்றோர்களுக்கு நற்செய்தி..!! அரசுப் பள்ளிகளிலேயே மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்!!

பெற்றோர்களுக்கு நற்செய்தி..!! அரசுப் பள்ளிகளிலேயே மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்!!

பெற்றோர்களுக்கு நற்செய்தி..!! அரசுப் பள்ளிகளிலேயே மீண்டும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்!!
X

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டன.இதற்காக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்தன. இந்த நிலையில், வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என தொடக்க கல்வித்துறை அறிவித்திருந்தது.

LKG

இதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே தங்கள் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல அரசியல் கட்சியினர்கள் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வலியுறுத்தி வந்தனர்.

Anbil-Mahesh

இந்நிலையில், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று முதல்வரின் அறிவுரையின்படி அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பு ஆசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர்” எனக் கூறினார்.

Next Story
Share it