பெற்றோருக்கு குட் நியூஸ்.. தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!
பெற்றோருக்கு குட் நியூஸ்.. தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (20-ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதற்கான முழு கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.
ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஏழை எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம்.
மேலும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் கல்வி கற்க அனுமதிக்கப்படுவர்.
இந்த திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவ- மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.
இந்நிலையில், 2022 - 2023-ம் கல்வியாண்டிற்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நாளை (20-ம் தேதி) ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், www.rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் மே மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

