பயணிகளுக்கு குட்நியூஸ்.. வரும் 1ம் தேதி முதல்.. தெற்கு ரயில்வே மெகா அறிவிப்பு..!
பயணிகளுக்கு குட்நியூஸ்.. வரும் 1ம் தேதி முதல்.. தெற்கு ரயில்வே மெகா அறிவிப்பு..!

தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண் 06405 / 06409 கொண்ட திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி). ரயில் எண் 06663 / 06664 கொண்ட மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி).
ரயில் எண் 06681 / 06658 திருநெல்வேலி - செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி). ரயில் எண் 06684 / 06687 கொண்ட செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) ஆகியவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், ரயில் எண் 06809 / 06810 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி). ரயில் எண் 06611 / 06612 கொண்ட திருச்சி - ஈரோடு - திருச்சி முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை (தினசரி) ஆகியவை ஜூலை 9-ம் தேதி முதல் இயக்கப்படும்
ரயில் எண் 06401 / 06402 கொண்ட அரக்கோணம் - கடப்பா - அரக்கோணம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (தினசரி) வரும் ஜூலை 27-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06831 / 06838 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனிக்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 18-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 06802 / 06803 கொண்ட கோவை - சேலம் - கோவை முன்பதிவில்லா MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்). ரயில் எண் 06881 / 06882 கொண்ட திருச்சி - கரூர் - திருச்சி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (ஞாயிறு தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்), ரயில் எண் 06821 / 06822 கொண்ட சேலம் - கரூர் - சேலம் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை (சனி தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும்) வரும் ஜூலை 27-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
ரயில் எண் 16847 / 16848 கொண்ட மயிலாடுதுறை - திண்டுக்கல் - மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து ஜூலை 11-ம் தேதியும், திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12-ம் தேதி இயக்கப்படவுள்ளது.

