Theme Check

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொருட்களை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொருட்களை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. இந்த பொருட்களை திருப்பி அனுப்ப அரசு உத்தரவு..!
X

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்கவும், பொருட்களின் தரத்தை உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரிசி உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நியாய விலை கடைகளில் குடிமைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் பொருட்கள் தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர்கள் அதை உறுதி செய்ய வேண்டும். தரமான பொருட்களாக இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது காலாவதியான பொருட்கள், தரமற்ற பொருட்கள் இருந்தால், உடனடியாக அந்த பொருட்களை திருப்பி அனுப்பலாம்’ என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் காரணமாக, அனைத்து மக்களுக்கும் இனிமேல் தரமான ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it