மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு..!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்' நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தத் தேர்வில் மாணவ - மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2022 - 2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பணி தொடங்கிய நிலையில், மே மாதம் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, https://nta.ac.in/ என்ற இணைய தளத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை நீட் தேர்வு எழுத 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

