மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!

தமிழகத்தில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முந்தினம் (19ம் தேதி) ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் நாளை (22-ம் தேதி) எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்கு மையங்களாக செயல்பட்டு வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை முழுமையாக செயல்படுமா அல்லது விடுமுறை விடப்படுமா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது.
இந்த சந்தேகங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா விளக்கம் அளித்துள்ளார். “தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99% வாக்கு மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 5 வார்டுகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

