மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி, 180 நாளில் பட்டம்.. அதிரடி காட்டிய யுஜிசி..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி, 180 நாளில் பட்டம்.. அதிரடி காட்டிய யுஜிசி..!

நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவ, மாணவியருக்கு பட்டப் படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால், இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பட்டப்படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) பிறப்பித்த உத்தரவில், ‘பட்டப்படிப்பை முடித்த 180 நாட்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும்.
பட்டங்களை தாமதமாக வழங்குவது மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, 180 நாட்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

