ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. 3000 பேருக்கு பணி நீட்டிப்பு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. 3000 பேருக்கு பணி நீட்டிப்பு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஒரு வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் இதர படிகளை வழங்கிடவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

