விசுதாவிடம் ஏமாந்தவர்களுக்கு குட் நியூஸ்.. உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு..!
விசுதாவிடம் ஏமாந்தவர்களுக்கு குட் நியூஸ்.. உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு..!

சென்னை அண்ணா சாலையில், ‘விசுதா பைனான்ஸ்' என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டது. இந்நிறுவனம் கடந்த 1997-ம் ஆண்டு, பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் தரப்படும் என்று கூறி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.
அதன் மூலம், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மோசடி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பணம் திரும்ப கிடைக்க, சென்னை உயர்நீதிமன்றம் தீர்வு குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு மூலம் பணம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது.
விசுதா பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை திரும்ப பெறாதவர்கள், சென்னை அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், டிஎஸ்பி சுந்தரத்தை நேரில் சந்திக்கலாம்.
ஏதாவது சந்தேகம் இருப்பின், 044 - 2250 2317, 94441 73410 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

