Theme Check

பெண்களுக்கு குட் நியூஸ்.. மாதவிடாய் சுழற்சி இனி வாட்ஸ்அப்பில்..!

பெண்களுக்கு குட் நியூஸ்.. மாதவிடாய் சுழற்சி இனி வாட்ஸ்அப்பில்..!

பெண்களுக்கு குட் நியூஸ்.. மாதவிடாய் சுழற்சி இனி வாட்ஸ்அப்பில்..!
X

சிரோனா ஹைஜீன் என்ற நிறுவனம், வாட்ஸ்அப் உடன் இணைந்து இந்தியாவின் முதல் பீரியட் டிராக்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை வாட்ஸ்அப் மூலம் கண்காணிக்க முடியும்.

வாட்ஸ்அப் மூலமாக தங்கள் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க 9718866644 என்ற எண்ணுக்கு ஹாய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். இதன் மூலம், பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களை தெரிந்து கொள்ளலாம்.
Women Can Now Easily Track Their Periods As Sirona Rolls Out India's First  Periods-Tracker Chatbot On WhatsApp - Tech
இது குறித்து சிரோனா ஹைஜீன் நிறுவனத்தின் நிறுவனர் தீச் பஜாஜ் கூறுகையில், “வாட்ஸ்அப் மூலம் எங்கள் பயனர்களுக்கு எளிதாக அணுகலை வழங்க AI தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

பீரியட் டிராக்கர் மூலம் மாதவிடாய், கருத்தரித்தல் மற்றும் கர்ப்பத்தை தவிர்ப்பது போன்ற மூன்று இலக்குகளை கண்காணிக்க முடியும்.

மேலும், பயனர்கள் தங்கள் மாதவிடாய் காலங்கள் மற்றும் அவரின் கடைசி கால விவரங்களை வாட்ஸ்அப் சாட் பாக்ஸில் உள்ளிட வேண்டும்.

அந்த பதிவை வைத்துதான் பயனர்களுக்கு மாதவிடாய் தேதியை நினைவூட்டுதல் மற்றும் வரவிருக்கும் சுழற்சி தேதிகள் பகிரப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it