Theme Check

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!
X

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “தனிநபர் குடும்ப அட்டை வழங்கப்படுமா..?, ரே‌ஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகைகள் பொருந்தாத காரணத்தினால் பொருட்கள் வழங்கும் பிரச்னைகள் நிலவுகின்றன” என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “யாரையும் சாராத, தனியாக சமைத்து வாழ்வை நடத்தும் தனி நபர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 91 லட்சத்து 71 ஆயிரத்து 807 தனிநபர் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 லட்சத்து 92 ஆயிரத்து 604 குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ரே‌ஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கைரேகை பதிவாகவில்லை என்றாலும், பிராக்ஸி முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறு நிவர்த்தி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it