Theme Check

நல்ல காலம்... தங்கம் விலை ரூ. 1,200 குறைந்தது

நல்ல காலம்... தங்கம் விலை ரூ. 1,200 குறைந்தது

நல்ல காலம்... தங்கம் விலை ரூ. 1,200 குறைந்தது
X

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 1,200 குறைந்தது.

தங்கத்தின் விலை அநியாயத்துக்கு உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலையில் பெரிதளவு மாற்றமில்லை. அதேநேரத்தில் நூற்றுக்கணக்கில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவந்தது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் தன் படைகளை ரஷ்யா நிறுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. இது சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நேற்று ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் காரணமாகவும் பங்குச்சந்தை சரிவின் காரணமாகவும் நேற்று தங்கம் விலை எதிர்பாராதவகையில் உயர்ந்தது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து, ரூ.39,608-க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

money

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 சரிந்து ரூ. 38,408-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 150 சரிந்து ரூ. 4,801-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 2.70 குறைந்து ரூ. 70-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குறைந்தாலும் வரும் நாட்களில் தங்கம் விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

newstm.in


Next Story
Share it