“நல்ல காலம் பிறக்காது” : சீமான் சுவாரஸ்ய ட்வீட்!!
“நல்ல காலம் பிறக்காது” : சீமான் சுவாரஸ்ய ட்வீட்!!

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக நாட்டை ஆளும் வரை இனி எப்போதும் நல்லகாலம் பிறக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அரசியல் நையாண்டி பதிவுகளை சீமான் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சீமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா..! என்னப்பா..? முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை.
அதுவா தம்பி.., பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக இந்த நாலு கட்சியும் இந்தநாட்டை ஆள்கிறவரை இனி எப்பவும் நல்ல காலம் பிறக்காதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சுப்பா... அதனால வர்றதில்லை தம்பி!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அண்ணா..!
— சீமான் (@SeemanOfficial) May 23, 2022
என்னப்பா..?
முன்னாடி எல்லாம் நம்ம வீடுகளுக்கு நல்ல காலம் பொறக்குது, நல்லகாலம் பொறக்குதுன்னு பூம் பூம் மாட்டோட குடுகுடுப்பை அடிப்பாங்களே. இப்பெல்லாம் ஏன் அண்ணா அவங்கெல்லாம் வர்றதில்லை?
(1/2)
அதே போல் நெஞ்சுக்கு நீதி படம் குறித்தும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தம்பி உதயநிதி நடித்த படத்தை முதல் காட்சி பார்த்துவிட்டுப் படம் எடுத்துப் பகிர்ந்து படத்தைப் பாராட்டி பதிவிடுகிறார்கள்.

டிக்கெட்களை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறார்கள்... படம் பார்ப்பவர்களுக்கு பிரியாணி போடுகிறார்கள். சிறப்பான மக்கள் பணி! வாழ்க திராவிட மாடல்!" என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படி தொடர்ந்து சீமான் எதிர்க்கட்சிகள் குறித்து கிண்டல் பதிவுகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
newstm.in

