ரேஷன் கடைகளை திறக்க அரசு மாற்று ஏற்பாடு!!
ரேஷன் கடைகளை திறக்க அரசு மாற்று ஏற்பாடு!!

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வரை மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொது மக்களை பாதிக்காத மாற்று நடவடிக்கைகளை எடுக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் நாளை வரை மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
newstm.in

