டூவீலர் மீது அரசு பஸ் மோதல்.. பயிற்சிக்கு சென்ற கோர்ட் பணியாளர் பலி..!
டூவீலர் மீது அரசு பஸ் மோதல்.. பயிற்சிக்கு சென்ற கோர்ட் பணியாளர் பலி..!

திருப்பூரில், இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதியதில் கோர்ட் பணியாளர் பரிதாபமாக பலியானார். உடன் வந்தவர் காயமடைந்தார்.
திருப்பூர் பூம்புகார் நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32). இவர், திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று (12ம் தேதி) விஜயமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள கோர்ட் ஊழியர் பயிற்சி முகாமில் பங்கேற்க, தன்னுடன் பணிபுரியும் சக பணியாளர் தினேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.
திருப்பூர் வளர்மதி நொய்யல் பாலம் அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் வந்த, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து செங்கப்பள்ளிக்கு செல்லும் அரசு பஸ் இருசக்கர வாகனம் மீது மோதியது.
அதில், சம்பவ இடத்திலேயே வினோத்குமார் பலியானார். காயமடைந்த தினேஷ் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார், அரசு பஸ் டிரைவர் யுவராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

