Theme Check

அரசு ஊழியர்கள் படம் பார்க்க அரை நாள் விடுமுறை..!

அரசு ஊழியர்கள் படம் பார்க்க அரை நாள் விடுமுறை..!

அரசு ஊழியர்கள் படம் பார்க்க அரை நாள் விடுமுறை..!
X

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், 1990-ல் காஷ்மீர் பண்டிட்டுகளை திட்டமிட்டு கொன்றது மற்றும் வெளியேற்றியதை இப்படம் சித்தரிக்கிறது. இந்த படத்துக்கு பாஜக ஆளும் ஹரியானா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர். எனவே, அந்த மாநிலத்திலும் படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச போலீசார் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் நாளில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அம்மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில், “மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க நாளை அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அவர்கள், தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தாங்கள் படம் பார்க்கச் செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும். அத்துடன், மறுநாள் அலுவலகம் செல்லும்போது படம் பார்த்ததற்கான டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Next Story
Share it