பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் அரசு வேலை – ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!!
பெண்ணாக மாறியவருக்கு மீண்டும் அரசு வேலை – ஆட்சியருக்கு குவியும் பாராட்டு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் சந்தானராஜ் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டு பஞ்சாயத்து ஒன்றில் பணிபுரிந்தார். அவர் திடீரென காணாலம் போனார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பணியை தனக்கு வழங்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா என்ற ஒரு விண்ணப்ப கடிதத்தை சந்தானராஜ் எழுதினார்.
அதில், தான் ஏன் வேலையை தொடர முடியாமல் போனது என்ற விவரத்தையும் குறிப்பிட்டிருந்தார். அதில், 2106ஆம் ஆண்டு, தான் மாற்று பாலின சிகிச்சை செய்து கொள்வதற்காக பணியில் இருந்து வெளியேறியதாகவும். தற்போது மீண்டும் அந்தப் பணி கிடைக்குமா எனவும் கோரிக்கை விடுத்து தாட்சாயிணியாக கடிதம் எழுதியிருந்தார்.
சந்தானராஜாக சென்று தற்போது தாட்சாயிணியாக வந்த அவருக்கு கொடுவேலி பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார். இதனால், மீண்டும் தன்னுடைய பணியைத் தொடங்கியுள்ளார் தாட்சாயிணி.
Some times small things matter a lot ! Reinstating a transgender person who discontinued her Govt job and got terminated due to long period of absence. pic.twitter.com/AzaQRMRTVG
— Dr Alby John (@albyjohnV) March 25, 2022
சின்னச் சின்ன விஷயங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டு, கருணை மற்றும் இந்த விவகாரத்தின் பாலினம் சார் நுணுக்கமான உணர்வுகளை கருத்தில் கொண்டு அவருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ட்வீட் செய்துள்ளார்.
தாட்சாயிணியின் நிலையை கருத்தில் கொண்டு தக்க சமயத்தில் முடிவெடுத்த ஆட்சியருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

