நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்றம் உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை (பிப். 5) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநரின் கருத்து தமிழ்நாட்டு மக்களால் ஏற்கத்தக்கவை அல்ல. சட்டத்திற்கு அடிப்படையான கூறுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்க கூடியவை அல்ல.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் அனைவரிடமும் கருத்து ஒற்றுமை நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆளுநர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விலக்குவதோடு, நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை கூட்டத்தின் முடிவில், இதே நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் கவர்னருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

