குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!!

போலி ரேஷன் கார்டுகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
தமிழகத்தில் நியாய விலை கடை மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

