Theme Check

செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை.. அரசு புதிய உத்தரவு !!

செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை.. அரசு புதிய உத்தரவு !!

செல்போனில் சத்தமாக பேசவும், பாட்டு கேட்கவும் தடை.. அரசு புதிய உத்தரவு !!
X

ரயில், பேருந்துகளில் பயணிக்கும் போது சிலர் தங்கள் செல்போனில் சத்தமாக பேசுவது அல்லது சத்தமாக பாட்டுகேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இது மற்றவர்களுக்கு தொந்தரவையும் கோபத்தையும் உண்டாக்கும். ஆனால், பிரச்சனை வரும் என்பதால் யாரும் இதுகுறித்து கேட்பதில்லை. ஒருசில இடங்களில் தகராறு உண்டாகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு சமீபத்தில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக கேரள அரசு பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

bus

இந்நிலையில் நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பை அனைத்து பேருந்துகளின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


newstm.in


Next Story
Share it