Theme Check

மீன் தொட்டிகளை தடை செய்ய அரசு திட்டம்.. காரணம் என்ன தெரியுமா..?

மீன் தொட்டிகளை தடை செய்ய அரசு திட்டம்.. காரணம் என்ன தெரியுமா..?

மீன் தொட்டிகளை தடை செய்ய அரசு திட்டம்.. காரணம் என்ன தெரியுமா..?
X

வட்டமான மீன் தொட்டிகளை விற்பனை செய்வதை தடை செய்ய பெல்ஜியம் அரசு திட்டமிட்டுள்ளது. வட்டமான மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாவதாக கூறி பெல்ஜியம் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து பெல்ஜியம் அரசின் விலங்குகள் நல அமைச்சர் பெர்னார்ட் கிளெர்பயட் கூறுகையில், “வட்ட வடிவிலான மீன் தொட்டிகள் மீன்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

வட்டமான தொட்டிகள் பெரும்பாலும் சதுர அல்லது செவ்வக வடிவ மீன் தொட்டிகளை காட்டிலும் சிறிய நீர் மேற்பரப்பைக் கொண்டுள்ளன, இது தண்ணீரில் உறிஞ்சப்படும் ஆக்ஸிஜன் அளவை பாதிக்கிறது.

மேலும், இந்த வடிவிலான தொட்டிகள் மீனின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வை கடுமையாக பாதிக்கிறது. வட்ட வடிவிலான இந்த தொட்டிகளுக்கான தடை பிரஸ்ஸல்ஸ் தலைநகர் பகுதிக்கு மட்டும் பொருந்தும்.

இனி வரும் காலங்களில் விற்பனைக்கு மட்டும் வட்ட தொட்டிகள் தடை செய்யப்படுமே தவிர மக்கள் அதை பயன்படுத்துவதில் அரசாங்கம் தலையிடாது” என அவர் தெரிவித்தார்.

Next Story
Share it