Theme Check

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்!!

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்!!

மாணவிகள் உட்பட 40 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்!!
X

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் பகுதியை அடுத்த சிங்கபுரா என்ற கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முகமது அசாருதீன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் பாடம் சொல்லி கொடுப்பதாக கூறி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக புகார்கள் எழுந்தது. அதுமட்டுமின்றி தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியைகளிடமும் லீலைகளை காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரும் பெண் ஆசிரியை ஒருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ka abuse

இதையடுத்து முகமது அசாருதீன் தலைமைறைவாகி விட்டார். அதற்கு பிறகே தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவ -மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆசிரியர் முகமது அசாருதீனை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை போலீஸார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

abuse 1

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதோடு காவல்துறை நடத்திய விசாரணையில் அவர், மாணவிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it