Theme Check

அரசு கஜானா காலி.. ரூ. 6 லட்சம் கோடி கடன்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

அரசு கஜானா காலி.. ரூ. 6 லட்சம் கோடி கடன்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

அரசு கஜானா காலி.. ரூ. 6 லட்சம் கோடி கடன்.. உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு..!
X

கோவை மாநகராட்சி, நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது; “கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சி அமைக்கும்போது அரசின் கஜானா காலியாக இருந்தது. ரூ.6 லட்சம் கோடி கடனை அதிமுக வைத்துவிட்டுச் சென்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பொறுப்பேற்ற உடனே குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணைகளாக ரூ.2000 என மொத்தம் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மகளிருக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழு வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கண்டிப்பாக கொடுக்கப்படும்.


நான் பிரச்சாரம் செய்யும் கூட்டம் அனைத்திலுமே ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக வந்துள்ளனர். பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.

எனவே, தமிழகத்தில் நடக்கும் இந்த நல்லாட்சி, உள்ளாட்சியிலும் தொடர வேண்டும். அதற்கு நீங்கள், திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Next Story
Share it