அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
அரசின் ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சி.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

கோவை வஉசி மைதானத்தில், அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
கோவை மற்றும் நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வ மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு சென்றார்.
இதையடுத்து, தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். கீழடி, கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
அவினாசியில் நடைபெறும் தொழில் முனைவோர்கள் ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். கோவை நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலமாக ஊட்டிக்கு புறப்படுகிறார்.
ஊட்டி செல்லும் மு.க.ஸ்டாலின் நாளை காலை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். 21-ம் தேதி ஊட்டி 200-ம் ஆண்டு விழா மற்றும் தமிழக அரசின் திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்.
Next Story

