தாத்தா, பாட்டியை அடித்தே கொலை செய்து புதைத்த பேரன்.. இதெல்லாம் ஒரு காரணமா?
தாத்தா, பாட்டியை அடித்தே கொலை செய்து புதைத்த பேரன்.. இதெல்லாம் ஒரு காரணமா?

குடிக்க பணம் தர மறுத்த தாத்தா, பாட்டியை 20 வயது பேரன் கொலை செய்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் தாம்ரி என்ற பகுதியில் ஹிமேஷ் என்ற 20 வயது இளைஞர் தனது தாத்தா பிரேம்சங்கர், பாட்டி பவான் தேவியுடன் வசித்து வந்தார். இளைஞர் ஹிமேஷ் மது போதைக்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக எப்போதும் போதையில் தான் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹிமேஷ் தனது தாத்தா, பாட்டியுடன் பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார். அங்குவைத்து மதுஅருந்த பணம் கேட்டு தாத்தா, பாட்டியிடம் ஹிமேஷ் சண்டை போட்டுள்ளார். ஆனால், இருவரும் பணம் தர திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். எவ்வளவு கெஞ்சியும் போதை ஏற்ற பணம் தராததால் ஆத்திரம் அடைந்த ஹிமேஷ், தனது தாத்தா, பாட்டி ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்துவிட்டு, அந்த கிராமத்தில் உள்ள இருவேற வீடுகளில் உடல்களை புதைத்து விட்டு கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நான்கு நாட்களாக பிரேம்சங்கர், பவான் தேவியை தொடர்புகொள்ள முடியாமல்போனதால் அவரது மகன்கள் சந்தேகமடைந்தனர். இத்தம்பதியின் மற்றொரு மகன் தனது சகோதரர் மகனான ஹிமேஷ் மீது சந்தேகப்பட்டு காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொடூர கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை அடுத்து விசாரணை நடத்திய காவல்துறை இருவரின் உடலையும் கண்டுபிடித்து உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது.
பின்னர், இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் பேரன் ஹிமேஷை கைது செய்து விசாரித்துள்ளது. குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் நடைபெற்ற வாக்கு வாதம் முற்றியே இந்த கொலையை செய்ததாக ஹிமேஷ் ஒத்துக்கொண்டுள்ளார்.
newstm.in

