Theme Check

பெரும் பரபரப்பு.. விமான விழுந்து நொறுங்கியதில் பயணிகள் அனைவரும் பலி

பெரும் பரபரப்பு.. விமான விழுந்து நொறுங்கியதில் பயணிகள் அனைவரும் பலி

பெரும் பரபரப்பு.. விமான விழுந்து நொறுங்கியதில் பயணிகள் அனைவரும் பலி
X

விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பெரு நாட்டின் நாஸ்கா நகரில் மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.

இந்நிலையில், விமானம் திடீரென விபத்திற்குள்ளானது. விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. அதாவது, தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்தனர்.

fv

இந்த விவிமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக நாஸ்கா காவல்துறை தலைவர் கமாண்டர் எட்கர் எஸ்பினோசா தெரிவித்துள்ளார். இதனிடையே விபத்திற்கான காரணம் பற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று இலகு ரக விமானங்களின் விபத்துக்கள் அவ்வப்போது நடப்பதால் இதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

newstm.in

Tags:
Next Story
Share it