Theme Check

பெரும் பரபரப்பு.. திமுக பெண் நிர்வாகி குத்தி கொலை !

பெரும் பரபரப்பு.. திமுக பெண் நிர்வாகி குத்தி கொலை !

பெரும் பரபரப்பு.. திமுக பெண் நிர்வாகி குத்தி கொலை !
X

திமுக பெண் நிர்வாகி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையானம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மனைவி ராக்கம்மாள்(52). ராக்கம்மாள் திமுகவின் வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்துவந்தார். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மூர்த்தியும், அவரது மனைவி சோலைமணியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனி தனியாக வசித்து வருகின்றனர். இருவரும் பிரிவதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என புகார் உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மூர்த்தி நேற்று மாலை அவரது வீட்டுக்குச் சென்று ராக்கம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் தயாராக வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியதாகக் கூறப்படுகிறது.

kathikuthu

இதில் பலத்த காயமடைந்த ராக்கம்மாளை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக பெண் நிர்வாகி குடும்ப பிரச்சனையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Next Story
Share it