Theme Check

பெரும் பரபரப்பு.. காவலா் தூக்கிட்டு தற்கொலை

பெரும் பரபரப்பு.. காவலா் தூக்கிட்டு தற்கொலை

பெரும் பரபரப்பு.. காவலா் தூக்கிட்டு தற்கொலை
X

காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.a

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தவா் மல்லையா என்கிற மல்லிச்சாமி (35). இவருக்கு மனைவி, இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். பணி நேரத்தின் போதும், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மல்லிச்சாமி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், நேற்று காலை அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், மல்லிச்சாமியின் சடலத்தை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பந்தல்குடி காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

v

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் பணிச்சுமையால் மன அழுத்தத்தில் காவலர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல், நேற்று இரவு கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மல்லிச்சாமி மன விரக்தியில் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் போலீசார் விசாரணையின்போது கூறுகின்றனர்.

காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சக காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காவலர்களுக்கு மன உளைச்சலை போக்கும் வகையில் அவ்வப்போது கவுன்சிலிங் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.


newstm.in

Next Story
Share it