பெரும் நெகிழ்ச்சி.. பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா !!
பெரும் நெகிழ்ச்சி.. பசு மாட்டுக்கு வளைகாப்பு விழா !!

பசு மாட்டுக்கு, உடல் முழுவதும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தி வழிபட்டனர்.
புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், அழிந்து வரும் மாடு இனங்களில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் இந்த குட்டை இன மாட்டிற்கு நான்கரை வயது ஆகிறது.
இந்த நிலையில் தற்போது அந்த மாடு 9 மாத சினையாக உள்ள உள்ளது. இதனையொட்டி அந்த மாடுக்கு வளைகாப்பு நடத்த மனோஜ்குமார் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, தட்டுகள் வைத்து மாட்டுக்கு பழவகைகள் கொடுத்தும், மங்கள ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர். மாட்டிற்கு வளைகாப்பு செய்த நிகழ்வு அப்பகுதி மக்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த மாடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கேரளாவை சேர்ந்த மகாலட்சுமி என்ற குட்டை இன மாடு 70 மீட்டர் உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்தநிலையில், மனோஜ்குமார் வளர்த்து வரும் இந்த மாடு 68 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே உள்ளதால் இவர் கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.
newstm.in

