பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை!!
பெரும் அதிர்ச்சி! ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை!!

சவுதி அரேபியாவில் ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சவுதி அரசு சார்பில் வெளியான தகவலில், தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அணைவரும் கொடூரமான குற்றங்களை செய்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மரண தண்டனை பெற்றவர்களில் பலர் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இவர்கள் பொருளாதார மையம் மற்றும் சவுதி பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. 81 பேரில் 73 பேர் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் சேர்ந்தவர்கள் ஒருவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 69 பேருக்கு மட்டுமே மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in

