பெரும் அதிர்ச்சி.. மேலும் ஒரு நடிகை தூக்குமாட்டி தற்கொலை
பெரும் அதிர்ச்சி.. மேலும் ஒரு நடிகை தூக்குமாட்டி தற்கொலை

சமீபகாலமாக இளம் நடிகர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன மர்மமாகவே உள்ளது. தமிழகத்தில் சின்னத்திரை நடிகை சித்ரா தொடங்கி பல மரணங்களுக்கு உண்மையான காரணங்களும் தெரியவில்லை. அண்மையில் கேரளாவில் அடுத்தடுத்து இரு இளம் நடிகைகளும் மாடல் அழகிகளும் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இந்த நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் நடிகையும் மாடல் அழகியுமான பிதிஷா டி மஜூம்தார்(21) தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்பஜாரில் உள்ள அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது. நடிகை வீட்டில் தற்கொலை செய்துக்கொள்ளும் யார் யாரெல்லாம் இருந்தார்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

அதோடு முக்கிய ஆதாரமாக கருதப்படும் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும் நடிகை அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஆண் நண்பருடன் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவுசெய்துள்ளனர்.
newstm.in

