பெரும் பதற்றம்.. பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் !!
பெரும் பதற்றம்.. பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல் !!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வலசை கிராமத்தில் காசிப்பிள்ளை-சாந்தகுமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர். காசிப்பிள்ளை - சாந்தகுமாரி தம்பதி ஊருக்கு வெளிப்புறம் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், தனது கணவர் காசி பிள்ளைக்கு, சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டிற்கு வெளியே சாந்தகுமாரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காசிப்பிள்ளை வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று பார்த்தபோது சாந்தகுமாரி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

சாந்தகுமாரியின் இடுப்பு பகுதியில் குண்டு பாய்ந்ததை கண்ட அவர் உடனடியாக மனைவி மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாந்தகுமாரியை திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டனரா? அல்லது இரவு நேர முயல் வேட்டைக்கு சென்ற நபர்கள் துப்பாக்கியால் சுட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்றும் அதற்கு உரிமம் உள்ளதா என்றும் விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in

