பெரும் சோகம்.. மதவழிபாட்டு தளத்தில் குண்டுவெடித்து 50 பேர் பலி
பெரும் சோகம்.. மதவழிபாட்டு தளத்தில் குண்டுவெடித்து 50 பேர் பலி

மதவழிபாட்டு தளத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் உள்ளது. முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் காபூலில் உள்ள கலீஃபா அகா குல் ஜான் மசூதியில் தொழுகைக்காக கூடினர்.
சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் அந்த மதவழிபாட்டு தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக பேசிய தலிபான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் முகமது நஃபி தாகோர், இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்றும், குண்டுவெடிப்புக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் வசிக்கும் காபூலின் கிழக்கு பகுதியில் இந்த மசூதி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஷியா - சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in