Theme Check

பெரும் சோகம்.. பஸ் கவிழ்ந்து விபத்து.. 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி..!

பெரும் சோகம்.. பஸ் கவிழ்ந்து விபத்து.. 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி..!

பெரும் சோகம்.. பஸ் கவிழ்ந்து விபத்து.. 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பலி..!
X

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா - ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலை நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை இந்த பஸ் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் சென்றுள்ளது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ்சின் கூரையில் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது.

பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகே உள்ள ஏரி மீது இந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே 4 மாணவர்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

Next Story
Share it