பெரும் சோகம்.. ரெய்னாவுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி !!
பெரும் சோகம்.. ரெய்னாவுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக் சந்த் ரெய்னா காலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது. புற்று நோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் இன்று இயற்கை எய்தினார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோகசந்த் ரெய்னா ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். அவருடைய பூர்வீக ஊர் ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெய்னாவாரி என்ற கிராமம் ஆகும். அவர் ராணுவ தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ரெய்னாவுக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களும் ஆறுதல் கூறிவருகின்றனர். அவரது மறைவுக்கு ஹர்பஜன் சிங் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். எம்.எஸ்.தோனி தொலைபேசி மூலம் ரெய்னாவுடன் தோனி பேசி ஆறுதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா எதிர்வரும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு தனது பெயரை கொடுத்துள்ளார். அவரை சென்னை அணி தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை விலையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Very sad to hear Suresh Raina’s father @ImRaina RIP uncle ji 🙏🙏
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 6, 2022
newstm.in

