பெரும் சோகம்.. திருமண ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை !!
பெரும் சோகம்.. திருமண ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை !!

திருமணம் ஆகாத ஏக்கத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகேயுள்ள வெள்ளாரன் விளையைச் சேர்ந்தவர் தங்கலிங்கம். மினி டெம்போ ஓட்டி வந்தார். 43 வயதான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் பெண் பார்த்தும், எந்த வரனும் அமையவில்லை. இதனால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கலிங்கம் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் தனது அறையில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் தாயார் அறையில் பார்த்தபோது அங்கு தங்கலிங்கம் இல்லை. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கம் தேடியபோது, வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து தாயார் கதறி அழுதார். இதனால் கிராம மக்கள் அங்கு சூழ்ந்து பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இதுகுறித்து ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண ஏக்கத்தில் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in

