Theme Check

பெரும் சோகம்.. செல்பி மோகத்தால் ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி பலி !!

பெரும் சோகம்.. செல்பி மோகத்தால் ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி பலி !!

பெரும் சோகம்.. செல்பி மோகத்தால் ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி பலி !!
X

செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்த புதுமண தம்பதி, நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்திக் பதான் சேக்(22). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தாகா சேக் (20) என்ற இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதியான இவர்கள் திருமணம் முடிந்த கையோடு அவ்வப்போது வெவ்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு சென்றுவந்தனர்.

child-death

இந்த நிலையில், நண்பர் சாகாப்புடன் காவத் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றனர். இதில் அவர்கள் ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி ஆற்றில் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற நண்பர் சாகாப்பும் ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

child-death

தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 பேரின் உடல்களையும் ஆற்றில் இருந்து மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வாத்வானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்பி எடுக்க முயன்ற போது புதுமண தம்பதி, நண்பர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it