கே.ஜி.எப்-2 படத்தின் அட்டகாசமான அப்டேட்.!!
கே.ஜி.எப்-2 படத்தின் அட்டகாசமான அப்டேட்.!!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது.
கன்னடத்தில் ரூ.200 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். கோலார் தங்க சுரங்கத்தில் பல காலமாக இருந்து வந்த அடிமை முறையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் இரண்டாம் பாகமும் உருவாகி ரிலீசுக்கு தயாராகி உள்ளது.இப்படத்தில், 'யாஷ்' ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கே.ஜி.எப்-2 படத்தின் ஒரு பாடலின் லிரிக்கல், வீடியோ மார்ச் 21ம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இப்படத்தின் ட்ரைலர் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது

