பெற்றோர்களின் கவனக்குறைவால் இரும்பு கேட்டில் சிக்கி கொண்ட பச்சிளம் குழந்தை !!
பெற்றோர்களின் கவனக்குறைவால் இரும்பு கேட்டில் சிக்கி கொண்ட பச்சிளம் குழந்தை !!

தஞ்சாவூர் மாவட்டதை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மனைவி கீர்த்திகா. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஹரி பிரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் தாராசுரம் அண்ணா சிலை அருகே மாடி வீட்டில் வசித்து வருகின்றனர்
ஹரி பிரியன் நேற்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த இரும்பாலான தடுப்பு கம்பிகளுக்கு இடையே குழந்தையின் தலை மாட்டிக்கொண்டது. இதனால் ஹரி பிரியன் அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குழந்தையை மீட்க போராடினர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதைக்கண்டு திடுக்கிட்டனர். ஒருவர் அவசர அவசரமாக ஆஷா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார்,

இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலகினர். அதன்பின் குழந்தைகயை பத்திரமாக கம்பிகளுக்கு இடையே இருந்து வெளியே எடுத்தனர்.
அப்போது கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பயந்து போயிருந்த குழந்தையை தாய் தூக்கி ஆறுதல் படுத்தினார் இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
என்ன தான் குழந்தைகள் நம் கண் முன் விளையாடி கொண்டிருந்தாலும் பெற்றோர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

