வாழ்த்து மழையில் சாதனை நாயகன் ரொனால்டோ
வாழ்த்து மழையில் சாதனை நாயகன் ரொனால்டோ

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பெரும் சாதனைகளை படைத்துள்ள இவருக்கு இத்தனை வயதா என்று வியக்கலாம். ஏனெனில் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மைதானத்தில் களமாடக்கூடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இன்று கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள்.
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள மேடிரா தீவில் பிறந்தவர் தான் ரொனால்டோ. வறுமையின் பிடியில் இருந்த ரொனால்டோவின் தந்தைக்கு கால்பந்து கிளப்பில் உதவியாளர் பணி கிடைக்க, அங்கிருந்து தான் ரொனால்டோவின் கால்பந்து உலகம் தொடங்கியது.
ஸ்போர்டிங் சிபி என்ற கிளப்பிற்காக விளையாடி வந்த ரொனால்டோ, முதல் முறையாக 2003ஆம் ஆண்டு மேன்செஸ்டர் யுனைடெட் என்ற பெரிய கிளப்பில் இணைந்தார். அப்போது அவருக்கு வயது 18 தான். அவரின் முதல் சீசனிலேயே எஃப்ஏ கோப்பையை வென்றார். அதன் பிறகு சாம்பியன்ஸ் லீக், ஃபிஃபா உலகக்கோப்பை என தொடர்ச்சியாக 3 முறை கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.
இவற்றின் பலனாக 23ஆவது வயதில் தன்னுடைய முதல் பலோன் டி ஆர் விருதை வென்றார். இது கால்பந்து விளையாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாகும். இதுதான் ரொனால்டோ வாழ்கையின் 2ஆவது அதியாயம் என்று கூறலாம். 2009ஆம் ஆண்டு ரியல் மெட்ரிட் அணிக்கு 94 மில்லியன் ஈரோ டாலருக்கு ( சுமார் ரூ. 834 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் மூலம் உலகின் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த அணியில் இணைந்தவுடன் லா லீக் தொடர், கோபா தொடர் என அடுத்தடுத்து 15 கோப்பைகளை வென்று கொடுத்து ஒட்டுமொத்த கால்பந்து உலகின் கவனத்தை பெற்றார். மேலும் 2013, 2014, 2016, 2017 என தொடர்ச்சியாக பலோன் டி ஆர் விருதுகளை தட்டிச்சென்றார். ரியல் மெட்ரிட் அணிக்காக 9 வருடங்கள் விளையாடிய ரொனால்டோ, 2018ஆம் ஆண்டு ஜுவாண்டஸ் அணிக்காக 100 மில்லியன் ஈரோப்பியன் டாலருக்கு ( சுமார் ரூ.850 கோடிக்கு) ஒப்பந்தம் ஆனார். 30 வயது வீரர் ஒருவர் இவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் ஆனது அனைவருக்கும் ஆச்சரியமானது. அதன் பிறகு தற்போது மீண்டும் தனது தாய் கிளப்பான மேன்செஸ்டர் யுனெட்டெட்டிற்கே திரும்பியுள்ளார்.
இதுவரை 5 பல்லோன் டி ஆர் விருதுகள், 4 ஐரோப்ப கோல்டன் ஷூஸ், 32 சாம்பியன் கோப்பைகளை வென்று கொடுத்த ரொனால்டோவின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் ரூ.4,250 கோடி ஆகும்.
ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்த பழக்கங்களை வெறுக்கின்றார். மற்றும் இவர் தனது உடலில் எவ்வித டேட்டுகளும் (பச்சை குத்துதல்) இட்டுக் கொள்ள மாட்டார், காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர். இந்த நிலையில் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதனிடையே, கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் தான் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடினார். தனது காதலியும் மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயில் பிறந்தநாளை கடந்த 27ஆம் தேதி கொண்டாடினார். உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 'ஹேப்பி பர்த்டே ஜியோ' என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படங்களை ஒளிரச்செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
newstm.in

