Theme Check

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது முக்கிய அறிவிப்பு..!

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது முக்கிய அறிவிப்பு..!

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது முக்கிய அறிவிப்பு..!
X

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி-யின் எந்த ஒரு போட்டித் தேர்வும் நடக்கவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 18-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்களுடைய டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதன் மூலம், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிக்கைகளின் அடிப்படையில், தனது ஒருமுறை நிரந்தர பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு [email protected]/ [email protected] என்ற மின்னஞ்சல் அல்லது 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it