Theme Check

வெளியானது குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி..?

வெளியானது குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி..?

வெளியானது குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்.. டவுன்லோட் செய்வது எப்படி..?
X

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி, வரும் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை டவுன்லோட் செய்ய, https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அங்கு முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் (Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது வேறு ஒரு பக்கம் திரையில் காண்பிக்கப்படும். அங்கு நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்கள் பயனர் ஐ.டி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும், கேப்சா வினாவுக்கு விடையளித்து உள் நுழைய வேண்டும்.

இல்லையெனில் நேரடியாக முகப்பு பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் (Registered User) என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.

உள்நுழைந்தவுடன் டாஷ்போர்டில் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட நீங்கள் தற்போது விண்ணப்பித்துள்ள தேர்வுகளின் விவரங்கள் காண்பிக்கப்படும். அதில், குரூப் 4 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் உங்கள் விண்ணப்ப எண் கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது உங்கள் ஹால் டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

Next Story
Share it