Theme Check

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் காவலர்கள்.. தமிழக டிஜிபிக்கு ரயில்வே கடிதம்

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் காவலர்கள்.. தமிழக டிஜிபிக்கு ரயில்வே கடிதம்

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் காவலர்கள்.. தமிழக டிஜிபிக்கு ரயில்வே கடிதம்
X

ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் சிலர், விரைவு ரயில்கள் உட்பட பல ரயில்களில் செல்லும்போது பயணச்சீட்டு எடுப்பது இல்லை. ஆனாலும், முதலாவது, 2ஆவது வகுப்புகளின் முன்பதிவு பெட்டிகளில் பிற பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கின்றனர்.

train

பரிசோதகர்கள் அவர்களிடம் பயணச்சீட்டு கேட்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களை காண்பிக்காமல் அடையாள அட்டையை காண்பித்து, தொடர்ந்து அதே இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்வதாக ரயில்வே நிர்வாகத்துக்கு அதிக அளவில் புகார்கள் வருகின்றன.

எனவே, அலுவல் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் காவலர்களுக்கு பயணச்சீட்டு தொடர்பான ஆவணங்களை உடனே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it